Cinema
‘உங்கள நம்ப முடியாது’ - பீஸ்ட் பட அப்டேட் வீடியோவில் அனிருத், நெல்சனை கலாய்த்த நடிகர் விஜய்!
விஜய்யின் 65வது படமாக உருவாகி வருகிறது பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் படமாக்கப்பட்ட பீஸ்ட் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பரவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஏப்ரலில் வெளியாகும் என்பதை மட்டுமே தெரிவித்துள்ளது.
இப்படி இருக்கையில், படத்தின் புரோமோஷன் உள்ளிட்ட பிற வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அதன்படி பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு தொடர்பான வீடியோவை வெளியிட்டு விஜய் ரசிகர்களை படக்குழு குஷிப்படுத்தியிருக்கிறது.
டாக்டர் பட பாடல் வெளியீட்டு பாணியிலேயே இந்த அப்டேட்டையும் நெல்சன், அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் தங்களுக்கே உரிய பாணியில் கொடுத்துள்ளனர்.
அதன்படி ‘அரபிக் குத்து’ என்ற புதுவகை பாடலை இயற்றியிருப்பதாக கூறியுள்ளனர். இந்த பாடல் எதிர்வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை நடிகர் விஜய்யே பாடியிருப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!