Cinema
மீண்டும் அஜித் vs விஜய்: பொங்கலுக்கு தெறிக்கப்போகும் தியேட்டர்கள்; புது அப்டேட்டால் ரசிகர்கள் குதூகலம்!
அஜித் நடிப்பில் ரிலீஸுக்கு தயாரகிக் கொண்டிருக்கும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் படமான இது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. நாளை படத்தின் டீஸர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்க படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் வலிமை படம் 2022ம் ஆண்டின் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வர உள்ளது. முன்னதாக ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தோடு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த படம் தற்போது விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தோடு வெளியாக உள்ளது.
ஏற்கெனவே அஜித், விஜய் என சமூக வலைதளங்களில் பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த இந்த செய்தி வெளியானதில் இருந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
முன்னதாக அஜித் மற்றும் விஜய் படங்கள் 5 முறை ஒரே தேதியில் வெளியாகியுள்ளது. அதில் 3 முறை பொங்கல் ரிலீஸில் இவர்களின் படங்கள் சந்தித்துள்ளது. தற்போது மீண்டும் இவர்களின் படங்கள் பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாவதால் கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ் மிகப்பெரிய அளவில் வசூலை பார்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 முதல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் தொடங்கப்போகிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“ரயில் பயணிகளை சாலைக்கு துரத்தும் மோடி அரசு” : கட்டண உயர்வுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!