Cinema
க்ரித்தி கேரக்டரில் கீர்த்தியா? வெளியானது MiMi பட ரீமேக் அப்டேட்!
நயன்தாரா, சமந்தாவை அடுத்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் சாவித்ரியின் பயோபிக்கான மகாநதி படத்துக்கு பிறகு மிஸ் இந்தியா, பெண்குயின் என அடுத்தடுத்து நாயகிகளுக்கான படங்களிலேயே நடித்து வந்தார்.
அதேபோல தற்போது குட் லக் சகி என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் இந்தியில் கடந்த மாதம் வெளியான மிமி படத்தின் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ள மிமி படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு கீர்த்தியும் பச்சை கொடி காட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக ஓடிடி தளத்தில் கடந்த மாதம் வெளியான மிமி படத்தில் க்ரித்தி சனோன், பங்கஜ் திரிபாதி, மனோஜ் பவ்ஹா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பெண், வாடகை தாயாக மாறி அதன் பிறகு ஏற்படும் சிக்கல்களை சமாளிப்பதாக மிமி அமைந்திருந்தது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. படத்தில் இடம்பெற்ற பரம சுந்தரி பாடல் கோடிக்கணக்கான பார்வையாளர்களை பெற்று சமூக வலைதளங்களில் பட்டைய கிளப்பி வருகிறது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!