Cinema
”முதலமைச்சரை சந்தித்த பின் எனக்கு நல்ல நேரம் தொடங்கியிருக்கு” - நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி!
'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தொடர்பாக வெகு நாளாக நீடித்து வந்த ஷங்கர் - வடிவேலு இடையேயான பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டிருக்கிறது.
விரைவில் வடிவேலு மீண்டும் முழு வீச்சில் நடிக்கத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனத்தின் ஒரு படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதை முன்வைத்தே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன் மீதான தடை நீக்கப்பட்டது குறித்துப் பேசியுள்ள நடிகர் வடிவேலு, "நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ‘ரெட் கார்டு’ தடையை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் எனது ரசிகர் மன்றம்.
மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன்முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு. நான் திரையில் தோன்றாத காலங்களில் என்னை உயிரோட்டமாக வைத்திருந்த மீம் கிரியேட்டர்களுக்கு நன்றி.
என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார்.
சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ படத்தில் செப்டம்பர் முதல் நடிக்க உள்ளேன். 2 படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டு பின்னர் காமெடியனாகவும் நடிப்பேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததன் விளைவாகவே இந்த நற்செய்திகள் என்னை வந்தடைந்திருக்கிறது. என்னொட நல்ல நேரம் தொடங்கிவிட்டது என தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் வடிவேலு பேட்டி அளித்திருக்கிறார்.
Also Read
-
“Online, Offline இண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!