Cinema
DC காமிக்ஸ் கதையில் சூர்யா? மணிரத்னத்துடன் இணையும் மாஸ்டர் இயக்குநர் - சினிமா அப்டேட்ஸ்!
1. சூப்பர் ஹீரோ படத்திற்காக சூர்யா-லோகேஷ் கூட்டணி!
தமிழ் சினிமாவின் முண்ணனி இயக்குநர்கள் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளனர். மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், கௌதம் மேனன், லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின், சசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் ஆகிய 10 பேர் இணைந்து இந்த முன்னெடுப்பை கையிலெடுத்துள்ளனர். இந்த நிறுவனத்திற்கு ‘Rain On Films’ என தலைப்பிட்டுள்ளனர். இந்த நிறுவனத்தில் தயாராகவிருக்கும் முதல் படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
சூப்பர் ஹீரோ கதையமைப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் முதல் முறையாக சூர்யா - லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமையவிருக்கிறது. இந்த படத்தின் கதை பிரபல DC காமிக்ஸான ‘The Steel Claw’ எனும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக இருக்கிறதாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2. அனபெல் சேதுபதி ரிலீஸ் தேதி வெளியானது!
புதுமுக இயக்குநரான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் படத்திற்கு ‘அனபெல் சேதுபதி’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திகில் நிறைந்த காமெடி படமாக உருவாகி உள்ள இதில், ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா, சுரேகா வாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கூடவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சில போட்டோக்களையும் பகிர்ந்துள்ளனர்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!