Cinema
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உருக்கமான பதிவு... யார் இந்த கணேசன்?
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் கணேசன் என்பவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “உங்களது வாழ்க்கைப் பாடங்கள் எப்போதும் என்னை விட்டு அகலாது” என்றும் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.
அவரது ரசிகர்கள் பலரும் யார் இவர் எனக் கேள்வி எழுப்பியிருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாக பதிவிட்ட பதிவின் புகைப்படத்தில் இருப்பவர் ‘சரவணா வீடியோஸ்’ கணேசன் ஆவார்.
சென்னையில் உள்ள சரவண வீடியோ செண்டர், முன்னணி டிஜிட்டல் வீடியோ எடிட்டிங் சேவை வழங்கும் நிறுவனமாகும். வீடியோ எடிட்டிங் சேவைகளோடு, சினிமா, டி.வி., சீரியல் போன்றவற்றிற்கு, வீடியோ தயாரிப்பு உபகரணங்களை வாடகைக்கும் வழங்கி வருகிறது இந்நிறுவனம்.
1970ஆம் ஆண்டில் சென்னை தி.நகரில் ‘சரவணா வீடியோஸ்’ நிறுவனத்தைத் தொடங்கியவர் கணேசன். திரைக் கனவு கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை அளித்தவர் கணேசன்.
ஏ.ஆ.ரஹ்மான் தனது ‘வந்தே மாதரம்’ ஆல்பத்தில் கூட கணேசனை குறிப்பிட்டு நன்றி பாராட்டியிருந்தார். பலரது கனவுக்கும் உதவிகரமாகவும், நம்பிக்கையாகவும் இருந்த கணேசன் அவர்களின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!