Cinema
நடிகை யாஷிகாவின் லைசென்ஸ் பறிமுதல்; ECR விபத்தில் நடந்தது என்ன?
செங்கல்பட்டு மாவட்டம் , மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் 25ம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் யாஷிகாவின் தோழியான ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் வள்ளிச்செட்டி பவானி (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாமல்லபுரம் காவல்துறையினர் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த், அவரின் இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோரை மீட்டு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த் மீது இந்திய தண்டணைச் சட்டப் பிரிவுகள் 279-337-304 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்த ஓட்டுநர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் .
Also Read
-
கிறிஸ்தவர்களை குறிவைக்கும் இந்துத்துவ கும்பல்... தமிழக ஆயர் பேரவை தலைவர் கண்டனம் - விவரம்!
-
“முடிஞ்சா...” - எச்.ராஜா, பழனிசாமி, அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
“நாடாளுமன்றத்தில் தமிழ் முழக்கம் - தாய்மொழிக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு MP-க்கள்” - முரசொலி புகழாரம்!
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!