Cinema
ஷங்கருடனான பிரச்னை முடிந்ததால் மீண்டும் திரையில் வடிவேலு? ஆக்ஷன் படத்துக்காக இணைந்த தர்மதுரை கூட்டணி!
வடிவேலு நடிப்பில் வெளியாகி இன்றளவும் ரசிக்க கூடிய காமெடிகள் ஏராளமாக இருந்தாலும் அவர் ஹீரோவாக நடித்து வெளியான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ தனி ரகம் என்று தான் சொல்லியாக வேண்டும். ஒரு படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்பார்களே அந்த ரகம் தான் இந்த இம்சை அரசன்.
இதன் இரண்டாம் பாகம் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ எனும் தலைப்பில் துவங்கி பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. ஷங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் துவங்கிய இந்த படம் பாதியிலேயே ஷங்கருக்கும் வடிவேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ட்ராப்பானது. இந்த படம் தொடர்பாக பல பிரச்சனைகள் கோலிவுட்டில் உலாவின. இந்த நிலையில் ஷங்கரிடமிருந்து இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.
தனது வேல்ஸ் இண்டர்நேஷனல் மூலமாக படத்தை தயாரிக்க இருக்கார். சிம்புதேவன் தான் இந்த படத்த இயக்க இருக்கிறார். முந்தைய பார்ட்டைப் போலவே முழு நீள காமெடியா இந்த படம் உருவாகி வருகிறது. கூடவே நிறைய எமோஷனல் செண்டிமெண்ட்லாம் இருக்கும் என சொல்லப்படுகிறது. வடிவேலுவுக்கும் ஷங்கருக்குமான பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கு என்பதால் சீக்கிரமே இந்த படத்துக்கான வேலைகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பரத் டூயல் ரோல்ல நடித்த `கூடல்நகர்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. ஆனாலும் அவர் இரண்டாவதாக இயக்கின `தென்மேற்கு பருவக்காற்று' மூலமாகதான் எல்லோரும் கவனிக்கும்படியான இயக்குநராக ஆனார். இன்னொரு விஷயம் அந்தப் படம் மூலமாகதான் விஜய் சேதுபதியும் அறிமுகமானார்.
இந்த சென்டிமென்டாலேயே விஜய் சேதுபதி - சீனுராமசாமி காம்போ அடுத்து இணைந்தது, `இடம் பொருள் ஏவல்', `தர்மதுரை' `மாமனிதன்' படங்களில் பணியாற்றினார்கள். இதில் தர்மதுரை தவிர மற்ற இரண்டு படங்களும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இப்போது இந்த கூட்டணி ஐந்தாவது முறையாக இணைய இருக்கிறது. இந்தப் படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார். ஆனால் இந்தப் படத்துக்கு முன்னால் இன்னொரு படத்தை இயக்க இருக்கிறார் சீனு ராமசாமி.
"இந்தப் படத்துக்கு முன்பு ஒரு இளம் நடிகரோட சேர்ந்து ஒரு படம் பண்ண இருக்கேன். அந்த ஹீரோ யார்னு இப்போ சொல்ல முடியாது. இப்போ அதுக்கான லொக்கேஷன் தேடும் வேலைகள்ல இருக்கேன். இந்தப் படத்தை முடிச்சதும் விஜய் சேதுபதி படத்தை தொடங்குவேன். ஆல்ரெடி விஜய் சேதுபதிக்கு கதைய படிக்க கொடுத்துட்டேன். அவருக்கு பிடிச்சிருக்கு. இது வரைக்கும் நாங்க சேர்ந்து பண்ணதுல இருந்து இந்தப் படம் வித்யாசமானதா இருக்கும். ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமா இருக்கும்" என சொல்லியிருக்கார் சீனு ராமசாமி.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!