Cinema
முன்னணி நாயகிகள் ஆச்சரியம்... நான்கு மொழிகளில் பிஸியான ராஷி கண்ணா!
2013ல் வெளியான பாலிவுட் படமான ‘மெட்ராஸ் கஃபே’ படம் மூலமாக சினிமா துறைக்கு எண்ட்ரி கொடுத்தவர் ராஷி கண்ணா. அதைத் தொடர்ந்து தெலுங்கு படங்கள் மூலமாக தென்னிந்திய சினிமா பக்கம் வந்து, தமிழிலும் பல படங்கள் நடித்தார்.
2018ல வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலமா தமிழ் சினிமா எண்ட்ரி கொடுத்தவங்க அடுத்தடுத்து அடங்கமறு, சங்கத்தமிழன், அயோக்யா என வரிசையாக படங்கள் நடித்தார். இப்போது இவங்க கைவசம் தமிழில் அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் என படங்கள் வரிசைக்கட்டி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க தெலுங்கில் பக்கா கமர்ஷியல், தேங்க் யூ ஆகிய படங்கள் இருக்கிறது.
மலையாளத்தில் பிரம்மம் என தென்னிந்திய மொழிகளில் மட்டும் 8 படங்கள் கமிட் செய்து வைத்திருக்கிறார். பாலிவுட் பக்கம் 2 வெப் சீரிஸ், 2 படங்கள் என செம பிஸியாக இருக்கிறார். இவருக்கு குவிஞ்சிருக்கும் இந்தப் பட வாய்ப்புகள் முன்னணி நாயகிகளுக்கும் பெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறது.
Also Read
-
தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியல்... திராவிட மாடல் ஆட்சியால் முதலிடம் பிடித்த தமிழ்நாடு !
-
போதைப் பொருள் வழக்கு... நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றத்தின் நிபந்தனை என்ன ?
-
”தமிழ் இலக்கியப் பரப்பில் என்றும் தனித்து ஒளிரும் நட்சத்திரம் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
"அதிமுக தொண்டர்களுக்கே அக்கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை" - அமைச்சர் KN நேரு !
-
திரும்பிய இடமெல்லாம் அன்னதானங்கள்! - கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு!