Cinema
“வீணாக தலையில் மண்ணள்ளிப் போட்டுக்கொண்ட பா.ஜ.கவினர்” - சித்தார்த்துக்கு ஆதரவாக திரண்ட நெட்டிஸன்கள்!
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிதீவிரமடைந்து வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல மாநிலங்கள் அவதிப்படுவதுடன் உயிரிழப்புகளும் வெகுவாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் மருத்துவமனைகள் பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.
இதை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் சித்தார்த், “புனிதரோ அல்லது தலைவரோ.... பொய் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் கன்னத்தில் அறை விழும்” எனப் பதிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.கவினர் நடிகர் சித்தார்த் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் இழிவாகப் பதிவிட்டு, அவரது அலைபேசி எண்ணை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
இதையடுத்து நடிகர் சித்தார்த் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய போன் நம்பரை பா.ஜ.கவினர் பரப்பிவிட்டுள்ளனர். எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த்தின் இந்தப் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சித்தார்த்துக்கு ஆதரவாகப் பதிவிடப்பட்டு வரும் #IStandWithSiddharth என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி?
-
3 நாட்களுக்கு AI & Digital Marketing பயிற்சி... தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!