Cinema
OTT-யில் கால்பதிக்கும் ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ்... முதல் படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?
தமிழின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏ.வி.எம். 75 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கிவரும் இந்நிறுவனம் தனது ஓடிடி பயணத்தை தொடங்குவதாக அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து ஏ.வி.எம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “75 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான கதையம்சம் உள்ள படங்கள் மூலம் , திரையுலகில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏ.வி.எம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை மக்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
புத்தம்புதிய, புதிரான, திரில்லர் கதைக்களம் கொண்ட "தமிழ் ஸ்டாக்கர்ஸ்" என்ற இப்படைப்பை அறிவழகன் இயக்க உள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு அதன் யதார்த்தங்களை சுவைபடச் சொல்லும் "தமிழ் ஸ்டாக்கர்ஸ்" என்ற தொடரின் மூலம் தன் OTT பயணத்தை சோனி லிவ்-ல் தொடங்குகிறது.
ஒரு படைப்பை சட்டவிரோதமாகவும், அங்கீகாரம் இல்லாமலும் நகல் எடுப்பது பெரும் குற்றம் மட்டுமின்றி, படைப்புத்திருட்டு என்பது, உலகெங்கும் உள்ள படைப்பாளர்களின் பெரும் கவலைகளில் ஒன்றாகும். இந்தியாவில், தமிழ் திரையுலகம், பல்வேறு ஆன்லைன் திருட்டு வலைத்தளங்களின் காரணமாக இந்த பிரச்சினையுடன் முடிவில்லாத போரை நடத்தி வருகிறது.
இந்தக் கதை அந்த திருட்டு உலகின் இருண்ட பக்கத்தை ஆழமாக சென்று காட்டுகிறது. மேலும் திருட்டு உள்ளடக்கத்தை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள குழுவை அடையாளம் காட்டுவதற்கு திரைத்துறையின் தொடர்ச்சியான போரை பற்றியும் சொல்கிறது. இந்தப் படைப்பு பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!