Cinema
வெளியானது ஏ.ஆர்.ரஹ்மானின் ‘99 சாங்ஸ்’ ட்ரெய்லர்... ஏப்ரல் 16ம் தேதி மூன்று மொழிகளில் ரிலீஸ்!
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். திரைப்படங்களுக்கு இசையமைப்பதைத் தாண்டி, ஏ.ஆர்.ரஹ்மானே கதை எழுதி, அவரது தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘99 சாங்ஸ்’. இந்தப் படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.
Ehan Bhat, Edilsy, Tenzin Dalha, Lisa Ray, Manisha Koirala, Rahul Ram, Ranjit Barot எனப் பலரும் நடித்திருக்கும் இந்தப் படம் இந்தியில் உருவாகியிருக்கிறது. இந்தி தவிர தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே இதன் இந்தி வெர்ஷன் பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில், விரைவில் மற்ற மொழி பாடல்களும் வெளியாக இருக்கிறது. ஒரு இசைக் கலைஞனின் பயணத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது படம். இந்தப் படத்தை ஏப்ரல் 16ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?