Cinema
தீபாவளிக்கு ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் அடுத்த படம்!
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி அன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நடிகை நயன்தாரா சமீபகாலமாகக் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார்.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்து இயக்கியுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.
அம்மன் நிகழ் உலகிற்கு வந்தால் என்னவாகும் என்ற வித்தியாசமான கோணத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது 'மூக்குத்தி அம்மன்'.
தற்போது இந்தத் திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
'எல்.கே.ஜி' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்து, இயக்கியுள்ள இரண்டாவது படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்தப் படத்தை அவருடன் என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா மற்றும் முக்கியக் கதாபாத்திரங்களில் மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Also Read
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’