Cinema

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகை ரியாவுக்கு மும்பை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின்!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு விசாரணையில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. மேலும் அவரது சகோதரர் ஷோவிக் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்களைக் கடந்த மாதம் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) கைது செய்தது.

இந்தநிலையில் நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு 9 நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியது மும்பை நீதிமன்றம்.

மேலும் ரியா ரூபாய் 1 லட்சம் பத்திரமாகச் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு, மேலும் விடுவிக்கப்படும் 10 நாட்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு தனது இருப்பைக் குறிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், தொடர்ந்து 10 நாட்களுக்கு அருகில் உள்ள மும்பை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும், ரூபாய் 1 லட்சம் பத்திரமாக ஜாமின் வழங்க வேண்டும். நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு வெளியேற முடியாது.

இந்த ஜாமின் நாட்களில் வேறு எந்த சாட்சியையும் சந்திக்க முடியாது, கிரேட்டர் மும்பையிலிருந்து வேறு எங்கும் பயணம் செய்தால் அந்த பயண விவரங்களை முன்கூட்டியே விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமையும் ஆறு மாதங்களுக்கு விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக வேண்டும். மேலும் வழக்கின் விசாரணை மற்றும் ஆதாரங்களைச் சேதப்படுத்தக்கூடாது ஆகிய நிபந்தனைகளை மும்பை நீதிமன்றம் விதித்துள்ளது.

Also Read: சுஷாந்த் சிங் மரண வழக்கில் திடீர் திருப்பம்: தோழி ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து தடுப்பு போலிஸாரால் கைது!