Cinema
“விலைமதிப்புமிக்க பொருட்கள் சேதம்” - பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது இளையராஜா போலிஸில் புகார்!
பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைத்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தன்னை இடத்தைக் காலி செய்யச் சொல்லி தொல்லை செய்வதாக ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசைக் குறிப்புகள், மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்களைச் சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது தற்போது புகார் தெரிவித்துள்ளார் இளையராஜா.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சட்டத்தை மீறி ஸ்டூடியோ உரிமையாளர் செயல்பட்டிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் அளித்த அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனக்கு ஒதுக்கப்பட்ட அறையின் சாவி தன்னிடம் இருக்கும்போது, அறை உடைக்கப்பட்டு இசைக்குறிப்புகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் அந்தப் புகாரில் இளையராஜா தெரிவித்துள்ளார்.
Also Read
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!