Cinema
அல்லு அர்ஜூனின் லேட்டஸ்ட் பட ரீமேக்கில் நடிக்க போட்டிபோடும் STR & SK ? - கைவிரித்த படக்குழு!
தெலுங்கு சினிமா உலகின் ஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வரும் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘அல வைகுந்தபுரமலோ’ படத்தின் ரீமேக் உரிமையைப் பெறவும், அதன் ரீமேக்கில் நடிக்கவும் போட்டாபோட்டி தொடர்ந்து வருகிறது.
பொதுவாக எந்த மொழியில் வெளிவந்த படமும் வசூல் ரீதியிலோ, விமர்சனை ரீதியிலோ பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துவிட்டால் அது வேறு மொழிகளிலும் ரீமேக் செய்து வெளியிடப்படுவது வழக்கம்.
ஆனால், அண்மைக்காலமாக இந்த ரீமேக் படங்களின் வருகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில், டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டாரான அல்லு அர்ஜூன் நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான ‘அல வைகுந்தபுரமலோ’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற பிரபலங்கள் வரிசைகட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான இந்தப் படம் சுமார் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்துள்ளது. விமர்சன ரீதியிலும் அதிரிபுதிரி ஹிட்டடித்ததால் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது இப்படம்.
ஆகையால், தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்து வெளியிட பேச்சுகள் எழுந்துள்ளது. இதற்காக எஸ்.கே. புரொடக்ஷன் தயாரிப்பில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் தரப்பு ரீமேக் உரிமையை பெற முன்வந்துள்ளது. அதேபோல, வாலு, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தரும் ‘அல வைகுந்தபுரமலோ’ படத்தை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் இயக்கத்தில் உறுதியானால் சிம்புவையே நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், ‘அல வைகுந்தபுரமலோ’ படத்தின் ரீமேக் உரிமை இதுவரை எவருக்கும் வழங்கவில்லை என்றும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், சூப்பர் ஹிட்டான படம் என்பதால், பெருமளவு விலைக்கு படக்குழு உரிமம் பெற கேட்கின்றனராம். அதனால், இன்னும் யாருக்கும் ரீமேக் உரிமை கொடுக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!