Cinema
பேட்டைக்கு ’மாஸ் மரணம்’; தர்பாருக்கு என்ன? - ரஜினியின் ஓப்பனிங் சாங் ரகசியம் லீக்!
ரஜினியின் தர்பார் படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தன்னுடைய டப்பிங் பணிகளை ரஜினி நான்கே நாட்களில் முடித்ததை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் பெருமிதத்தோடு பதிவிட்டிருந்தார்.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தர்பார் படம் ஜனவரி 9ம் தேதியே வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனமான லைகா தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக வெளியான தர்பார் தீம் மியூசிக் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து படத்தின் பாடல்கள் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள ஓப்பனிங் பாடல் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எஸ்.பி.பி. பாடியுள்ள சும்மா கிழி என்ற பாடல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ரஜினியின் பேட்ட படத்தில் அனிருத்தின் இசையில் எஸ்.பி.பி மரண மாஸ் பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!
-
குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி!