Cinema

DC vs Marvel போட்டியை சீரிஸாக உருவாக்கும் எண்ட்கேம் இயக்குநர்கள் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஹாலிவுட்டில் Marvelக்கும், DCக்கும் இடையே ஒரு பெரும் பனிப்போரே நடந்து வருகிறது. இரண்டு நிறுவனங்களின் படங்களுமே காமிக்ஸ் புத்தகங்களை மையமாக வைத்தே சூப்பர் ஹீரோ படங்களாக வெளிவருகிறது.

ஆனால், ஆரம்பகட்டத்தில் டிசி காமிக்ஸ் படங்களுக்கு இருந்த வரவேற்பு மார்வெல் உள்ளே நுழைந்த பிறகு 10 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இது ரசிகர்களிடையே பிரதிபலிக்க அவர்களிடையேயும் டிசி, மார்வெல் ரசிக கூட்டங்கள் என பிரியத் தொடங்கின.

இந்த நிலையில், மார்வெல் நிறுவனம் கடைசியாக வெளியிட்ட அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை இயக்கிய ரோஸ்ஸோ ப்ரதர்ஸ் Quibi என்ற பெயரில் ஒரு ஆவண சீரிஸை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த Docuseries-ன் தீம் ஆக Marvel vs DC உள்ளது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நடக்கும் இந்த இருதரப்புக்கும் இடையேயான ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் இந்த Quibi சீரிஸில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

ஆண்டனி ரோஸ்ஸோ, ஜோ ரோஸ்ஸோ

இந்த சீரிஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நடக்கவிருக்கும் Slugfest என்ற நிகழ்வில் வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது Quibi சீரிஸுக்கான ஆரம்பகட்டப் பணிகளை ரோஸ்ஸோ ப்ரதர்ஸ் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.