Cinema
அனிமேஷன் படமாக உருவான ‘ஸ்கூபி-டூ’ : 90’ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜிக் ஃபீலை தூண்டிய ட்ரெய்லர்! (வீடியோ)
2K கிட்ஸுக்கு பப்ஜி போன்ற ஆன்லைன் கேம்ஸ் இருக்கின்றன என்றால் அதைவிட 90’ஸ் கிட்ஸ்களுக்கு கார்ட்டூன் தொடர்கள்தான் சொர்க்கமே. அது தற்போது வரை தொடர்ந்து வருகிறது. லயன் கிங், டாம் அண்ட் ஜெர்ரி என பல கார்ட்டூன் தொடர்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதில் ஒன்றுதான் ஸ்கூபி-டூ.
அமெரிக்க கார்ட்டூன் தொடரான ஸ்கூபி-டூவுக்கு உலகம் முழுதும் எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பிரெட் ஜோன்ஸ், டாப்னே ப்ளேக், வெல்மா டின்க்லீ, ஷேகி ராஜர்ஸ், மற்றும் இவர்களது ஸ்கூபி-டூ எனும் பேசும் பழுப்பு நிற கிரேட் டேன் நாய் அட்டகாசமான குறும்புத்தனத்துடன் தங்கள் மாய வாகனத்தில் மேற்கொள்ளும் சாகசங்கள் தான் இத்தொடரின் கதை.
‘ஸ்கூபி-டூ’ தொடர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றது. 2013ல் வெளியான ஒரு கருத்துக்கணிப்பில் ஸ்கூபி-டூ கார்ட்டூன் பட வரிசையில் 5ம் இடத்தைப் பிடித்தது. இப்போது இந்த ஸ்கூபி-டூ கார்ட்டூன் ‘Scoob’ என்ற பெயரில் அனிமேஷன் படமாக உருவாகியிருக்கிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை டாம் அண்ட் ஜெர்ரி படங்களை இயக்கியதில் புகழ்பெற்ற ஸ்பைக் ப்ராண்டிட் மற்றும் டோனி செர்வோன் கூட்டணி இயக்கியுள்ளது.
இந்த ட்ரெய்லரோடு 2020்ம் ஆண்டு மே 15ம் தேதி திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பையும் கொடுத்துள்ளது படக்குழு. ட்ரெய்லர் ரிலீஸான ஒரே நாளில் கோடிக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனை லைவ் ஆக்ஷன் படமாக எடுக்கவுள்ளதாக டிஸ்னி அறிவித்திருந்ததற்கு உற்சாகமடைந்த கார்ட்டூன் ரசிகர்களை ஸ்கூபி-டூ அனிமேஷன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு மேலும் குஷிப்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!