Cinema
1..2..3-க்கு பிறகு உருவாகிறது ஜான் விக் 4: 2021-ல் மிரளவைக்க வருகிறது!
‘ஜான் விக்’ என்ற படத்தின் பெயரைக் கேட்டதுமே பயங்கரமான ஆக்ஷன் சீன்கள்தான் ஹாலிவுட் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும். இந்த படத்தின் இரண்டாவது பாகம் கூட கடந்த 2017ம் ஆண்டு வெளியானது. Keanu Reeves ஜான் விக்கா நடித்திருந்தார்.
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு கிடைக்கும் நிகரான வரவேற்பு ஜான் விக் படத்துக்கும் கிடைத்திருந்தது. இதனையடுத்து, இந்த ஆண்டு ஜான் விக் படத்தின் 3வது பாகமும் வெளியானது. இது உலகளவில் சூப்பர் ஹிட் அடித்தது.
பழிவாங்கும் கதை என்பதால், ஜான் விக் சண்டையிடும் காட்சியும், பழிவாங்கும் விதமும்தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக கூறலாம். இந்த நிலையில், படத்தின் நான்காவது பாகமும் தயாராகி வருகிறது.
ஜான் விக்காக நடித்திருக்கும் Keanu Reevesக்கு இந்த படத்தின் மூலம், ஹாலிவுட்டில் மிகப்பெரிய மார்க்கெட்டை பிடித்துள்ளார். இந்த வரவேற்பும், வெற்றியும் 4வது பாகத்துக்கும் தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனை 2021ம் ஆண்டு மே 21ம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்திருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், படத்தின் முதல் ட்ரெய்லரும் 2020ம் ஆண்டு சம்மர் விடுமுறையின் போது வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!