Cinema
லஞ்சம் வாங்கிக் கொண்டு போலிஸார் என் மீது பொய் வழக்கு போடுகிறார்கள் - மீரா மிதுன் பரபரப்பு குற்றசாட்டு!
தனியார் தொலைக்காட்சி நடத்தும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார் நடிகை மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியதால் அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மீரா, கொலை செய்வதற்காக திட்டம் தீட்டியது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவரும் மீரா மிதுன் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''சமூக ஊடகங்களில் தன்னை பற்றி அவதூறுகள் ஒரு வருடங்களாக பரப்பப்பட்டு வருவதை காவல்துறை கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசின் சட்ட ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. சிலர் கொடுத்த லஞ்சத்தை வாங்கிக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் என் மீது பொய் வழக்குகள் போடுகிறார்கள்.” என்று கூறினார்.
உயர் அதிகாரிகளுக்கு தனது பிரச்சனையை எடுத்துச் சென்று, அதன் மூலம் உரிய தீர்வும், தவறாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கைகளும் எடுப்பேன் எனவும் சபதம் எடுத்துள்ளார் மீரா. விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை தனக்கு சம்பளம் எதுவுமே வழங்கப்படவில்லை என்ற அவர், நிகழ்ச்சி முடிந்ததும் எந்தத் தொடர்பும் இல்லாத வகையில் விஜய் தொலைக்காட்சி நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தனக்கான சம்பளத்தை விஜய் தொலைக்காட்சி இதற்கு பிறகும் தர மறுத்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நான் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன்.
இது ஆனாதிக்கம் நிறைந்த சமூகமாக இருக்கிறது. சமூக விழிப்புணர்விற்காக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். அதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், தன்னால் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்றார்.
Also Read
-
ஏன் வெளியே சென்றார்கள் : ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
-
பீகார் தேர்தல் - பா.ஜ.க ஆசையில் மண்ணைப் போட்டது 'இந்தியா' கூட்டணி : முரசொலி!
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!