Cinema
ரஜினி, அஜித்தின் வசூல் சாதனையை முறியடித்த விஜய்யின் பிகில் - தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல்!
விஜய்-அட்லி கூட்டணியில் 3வது முறையாக உருவாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பிகில். பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்பதால் பெண்கள் மத்தியில் பிகிலுக்கு மிகுந்த வரவேற்பை கிடைத்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்.,25ம் தேதி ரிலீசான இந்த படம் முதல் மூன்று நாட்களிலேயே பாக்ஸ் ஆஃபிஸில் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், படத்தின் வசூல் குறித்த பல்வேறு விமர்சனங்களுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய தகவலை கொடுத்துள்ளது பிகில் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றிருந்த ஸ்கிரீன்சீன் நிறுவனம்.
அதாவது, தமிழகத்தில் மட்டும் முதல் வாரத்தில் பிகில் படத்தின் வசூல் ரூ.100 கோடியை ஈட்டியுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.
அதுபோல உலகளவில் வெளியான பிகில் படம் இதுவரை 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என வர்த்தக நிபுணரும் சினிமா விமர்சகருமான தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில் வெளியான அக்ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல்- 4 படத்தின் வசூலையும் விஜய்யின் பிகில் படம் முறியடித்துள்ளது. இது மட்டுமல்லாமல் ரஜினி, அஜித்தின் படங்கள் ரூ.100 கோடி வசூலை ஈட்ட மூன்று வாரங்கள் எடுத்த நிலையில் விஜய்யின் பிகில் படம் முதல் வாரத்திலேயே 100 கோடியை எட்டியிருப்பது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!