Cinema
வெளியாகிறது அடுத்த Avengers திரைப்படம் : புதிய சூப்பர் ஹீரோக்கள்... வித்தியாசமான கதை - அப்டேட்ஸ் இங்கே !
மார்வெல்ஸின் சூப்பர் ஹீரொ படங்களுக்கு உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியாகும் அவெஞ்சர்ஸ் படம் மார்வெல் ரசிகர்களுக்கு திருவிழா போன்றது. மார்வெல்ஸின் சூப்பர் ஹீரோக்கள் ஒன்றினைந்து போராடும் அவெஞ்சர்ஸ் படங்களின் வரிசையில் கடைசியாக வெளியாகி விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் உலக அளவில் வரலாற்று சாதனையை படைத்தது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.
அதன் இறுதியில் அயர்ன் மேன் இறந்து விட்டதாலும் மற்ற சூப்பர் ஹீரோக்கள் வெவ்வேறு பாதையில் சென்று விட்டதாலும் அடுத்த அவெஞ்சர்ஸ் நிச்சயம் இது போன்ற ஒரு எமோஷ்னல், ஆக்ஷன் ப்ளாக்காக இருக்க வாய்ப்பிருக்காது என கருதப்பட்டது.
ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக அடுத்தடுத்து புதிய சூப்பர் ஹீரோக்களை அறிமுகப்படுத்தியது மார்வெல் ஸ்டுடியோஸ். அடுத்து வரும் ஃபேஸ் 4ல் மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் தனி தனிப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அடுத்த அவெஞ்சர்ஸ் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த சூப்பர் ஹீரோக்களை கொண்ட அடுத்த அவெஞ்சர்ஸ் திரைப்படம் வரும் 2023ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் முந்தைய சூப்பர் ஹீரோக்களில் ஸ்பைடர் மேன் மற்றும் ப்ளாக் விடோ மட்டுமே இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!