Cinema
Marvel, DC நிறுவனங்களைக் கலங்கடிக்க களத்தில் இறங்கிய வின் டீசல் ! : விரைவில் வெளியாகிறது BloodShot
நாவல் மற்றும் காமிக் புத்தகங்களில் வரும் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் படங்களுக்கு உலகமெங்கும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக Marvel மற்றும் DC படங்களே விளங்குகிறது.
அந்த வகையில், பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் BloodShot என பெயரிடப்பட்டுள்ள காமிக் கதை சார்ந்த படத்தில் நடித்துள்ளார். சோனி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வாலியண்ட் என்ற காமிக் புத்தக கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஹாலிவுட் பிரபல தொழில்நுட்ப கலைஞரும், இயக்குநருமான தேவ் வில்சன் இயக்கியுள்ளார். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் BloodShot படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை இன்று சோனி நிறுவனம் யுடியூப்பில் வெளியிட்டுள்ளது. படத்தில் எலிசா கோன்சலிஸ், சாம் ஹியுகன், டோபி கெப்பில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் வின் டீசலுக்கு கிடைக்கும் சூப்பர் பவர், படம் முழுவதும் அவரை வில்லன் போன்ற தோற்றத்தை உண்டாக்கும் என்பது ட்ரெய்லர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, வின் டீசலுடன் இணைந்து ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் சீரிஸ்களில் நடித்திருந்த வெயின் ஜான்சன் (தி ராக்) டிசி காமிக்ஸின் அடுத்த படைப்பான Black Adam படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவரை தொடர்ந்து வின் டீசலும் காமிக் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்திருப்பது ஹாலிவுட் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!