Cinema
ரஜினி 168ல் ரஜினிக்கு ஜோடியாகிறாரா சந்திரமுகி நாயகி? பேச்சுவார்த்தையில் படக்குழு!
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் இப்படத்தின் பட பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து இயக்குனர் சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.
இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் இப்படம் ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக இருக்கும் என்று இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே ரஜினியுடன் ‘சந்திரமுகி’ படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்படத்தில் அவர் நடிகர் பிரபுவின் மனைவி கேரக்டரில் நடித்திருந்தார் அதனால் இந்த படம் மூலமாக ஜோதிகா ரஜினிக்கு ஜோடியாவாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
Also Read
-
பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் போலி Instagram கணக்கு : பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி - நடந்தது என்ன?
-
தமிழ்நாட்டில் 4 உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்!
-
”இந்திய நீதித்துறையை அச்சுறுத்துவதற்காக வீசப்பட்ட காலணி” : கி.வீரமணி கடும் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாட்டு மையமாக மாற்ற வேண்டும்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : இரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு!