Cinema
ஏஞ்சலினா ஜோலிக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்!
நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிகமாக ஹிந்தி மொழிப் படங்களில் ஆர்வம் செலுத்திய இவர் அங்கு முன்னணி நாயகியாக விளங்குகிறார்.
இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சிறிய இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் படம் Maleficent : Mistress of Evil. இந்த படத்தை இந்திய மொழிகளில் டப் செய்து வெளியிட முடிவு செய்த படக்குழு அதற்கான வேலைகளை இந்தியாவில் துவங்கியுள்ளது.
இதில் இந்தி மொழியில் ஏஞ்சலினாவின் கதாபாத்திரத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் குரல் கொடுக்க உள்ளார். இதனால் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளதால் இங்கும் ஒரு முக்கிய நடிகையை ஏஞ்சலினாவுக்கு டப்பிங் பேச வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. விரைவில் அந்த உச்ச நடிகை யார் என்ற தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!