Cinema
டிஸ்னியிடம் இறங்கி வந்த சோனி : ஸ்பைடர் மேனை மீட்டதா மார்வெல்?!
மார்வெல் காமிக்ஸ் புத்தகங்களின் மூலம் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை இந்த உலகம் அறிந்திருந்தாலும், அந்த சூப்பர் ஹீரோவை சினிமாவில் காட்டி மக்களை ஆச்சர்யப்படுத்திய முழு பெருமையும் சோனி பிக்சர்ஸையே சேரும்.
2000ஆம் ஆண்டுகளிலே ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை சோனிக்கு மார்வெல் காமிக்ஸ் விற்றுவிட்டதால் இந்த ஸ்பைடர் மேன் மூலமாக வரும் அனைத்துப் புகழும், வசூலும் முதலில் சோனிக்கே சொந்தமானதாக இருந்தது. பின்னர் மார்வெல் ஸ்டூயோஸோடு சேர்ந்து ஒப்பந்தங்களின் அடிப்படையில் சோனி நிறுவனம் லாபம் பார்த்து வந்தது.
ஆனால் சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்’ படத்துடன் மார்வெல், சோனியின் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததால் புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சோனியிடம் டிஸ்னி முன்வைத்த கோரிக்கைகள் சர்ச்சைக்குள்ளானதால், ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை மார்வெல்லிடமிருந்து சோனி பிரித்துச்சென்றது.
அதை தொடர்ந்து வெளியான ஒவ்வொரு தகவலும் மார்வெல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. சோனியும் “ஸ்பைடர் மேன் கதாபத்திரத்தை வைத்து இனி நாங்களே படமெடுப்போம். இந்த கேரக்டரை விற்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை” என்றெல்லாம் கூறி மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் சோனியும் - டிஸ்னியும் இணைந்து புதிய ஒப்பந்தம் போடத் தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஒப்பந்தத்தில் டிஸ்னி எதிர்பார்த்த 50 சதவிகித ஷேர் கிடைக்கவில்லை என்றாலும் 30 சதவீதம் கிடைத்துள்ளதால் இந்த ஒப்பந்தம் கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடவே, ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தோடு ‘வெனோம்’ கேரக்டரையும் மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இணைக்கும் உரிமையையும் டிஸ்னி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸின் 5வது ஃபேஸ் படங்களின் மீது மார்வெல் ரசிகர்களுக்கு ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.
Also Read
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!