Cinema
முதலில் பிகில்... அடுத்த அப்டேட்களை நானே சொல்கிறேன்.. வதந்திகளை நம்ப வேண்டாம் - விஜய் 64 இயக்குநர்
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பிகில்'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதற்கு முன்பு லோகேஷ் இயக்கிய மாநகரம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனையடுத்து கார்த்தியை வைத்து கைதி என்கிற படத்தை லோகேஷ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
இதற்கு அடுத்ததாக விஜய் நடிக்க, எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவாளராகவும், ஃபிலோமின் ராஜ் எடிட்டராகவும், ஸ்டன்ட் சில்வா ஃபைட் மாஸ்டராகவும் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘விஜய் 64’ திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ம் தேதி துவங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாகவும், படத்தின் டைட்டில் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வலம் வந்துகொண்டிருந்தன. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்னும் முடிவாகவில்லை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், ''விஜய்யின் 64 படத்திற்கான டைட்டில் இன்னும் முடிவாகவில்லை. அதனால் டைட்டில் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். விஜய்யின் பிகில் படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன் வெற்றியை கொண்டாடத் தயாராகுங்கள்'' என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!