Cinema
உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைக்கும் அனிருத்... என்னென்ன படம் தெரியுமா?
தனுஷ் நடிப்பில் உருவான 3 படம் மூலம் தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து அசத்தி வருகிறார் அனிருத். மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த வருடம் அனிருத்துக்கு மிக முக்கியமான வருடங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த வருடத்தில் ரஜினி, கமல், விஜய் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்திற்காக 2-வது முறையாக ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார். முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்திற்காக இசையமைத்திருந்தார் அனிருத்.
இதையடுத்து, கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன்-2 படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் விஜய் 64 படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். கத்தி படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் உடன் கூட்டணி அமைத்துள்ளார் அனிருத்.
முன்னதாக 2014ம் ஆண்டு வெளியான கத்தி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தக் கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தமிழின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கும் அனிருத் தான், தற்போது சினிமா இசை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!