Cinema
இனிமேல் ஸ்பைடர்மேன் படங்கள் வராதா ? ஏன் ? : அதிர்ச்சியில் ரசிகர்கள் - ட்ரெண்ட் ஆகும் #SaveSpiderMan
மார்வெல் காமிக்ஸ் புத்தகங்களின் மூலம் ஸ்பைடர்மேன் கதாப்பாத்திரத்தை அனைவரும் அறிந்திருந்தாலும், அந்த சூப்பர் ஹீரோவை சினிமாவுக்கு கொண்டுவந்து மக்களை ஆச்சர்யப்படுத்திய முழு பெருமையும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தையே சேரும்.
ஸ்பைடர்மேன் 1,2,3 எனவும் அமேஸிங் ஸ்பைடர் மேன் 1,2 என இந்த கதாப்பத்திரத்தை மையமாக வைத்து திரைப்படங்களை சோனி நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. ஆனால் அதற்கு மேல் ஸ்பைடர் மேனை வைத்து படமாக்க முடியாததால் மார்வெல் உடன் இணைந்து ஸ்பைடர் மேன் படம் மூலம் சோனி பிக்சர்ஸ் லாபம் ஈட்டியது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படம் (Spider man Far from Home), 1.1 பில்லியன் டாலர் வசூல் செய்தது. சோனி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிடப்பட்ட படங்களில் அதிக வசூலை இந்த படம் குவித்துள்ளது. ஆகையால் இந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதற்காக திட்டமிட்டுள்ள சோனி, ரசிகர்களை ஈர்ப்பதற்காக 4 நிமிடம் கொண்ட முக்கியமான காட்சியை சேர்க்கவும் முடிவெடுத்துள்ளது.
இந்த நிலையில், ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படம் அதிக வசூலை குவித்துள்ளதை அடுத்து 2015ம் ஆண்டு சோனிக்கும், மார்வெலுக்கும் இடையே போடப்பட்ட 70-30 என்ற முறையில் பங்குகளை 50க்கு 50ஆக மாற்ற மார்வெல் நிறுவனம் கோரியிருந்தது.
ஆனால், இதற்கு சோனி நிறுவனம் ஒப்புக்கொள்ளாததால் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்து உருவாக இருந்த ஸ்பைடர்மேன் படத்தை மார்வெல் கைவிட்டுள்ளதாகச் செய்திகள் பரவின.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்பைடர்மேன் மற்றும் மார்வெல் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களது ஆதங்கங்களையும், கருத்துகளையும் பகிர்ந்து #SaveSpiderMan என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !