Cinema
மாநாடு படத்தில் மீண்டும் இணைய பச்சைக் கொடி காட்டிய சிம்பு? - கைவிடப்படுகிறது மகா மாநாடு? புதிய அப்டேட்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த படம் மாநாடு. அரசியலை மையமாக கொண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியதும் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது.
ஆனால் பல மாதங்களாகவே படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் தொடங்கப்படாமல் இருந்ததால் திடீரென சிம்பு நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
மேலும், மாநாடு படம் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலேயே உருவாகும் என்றும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, மாநாடு படம் கைவிடப்பட்டதால் சமீபத்தில் மகா மாநாடு என்ற படத்தை தானே 125 கோடி செலவில் தயாரித்து 5 மொழிகளில் இயக்கி சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று பிறந்தநாளை காணும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது, மாநாடு படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சிம்பு தெரிவித்ததாகவும், விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதகாவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
ஏன் வெளியே சென்றார்கள் : ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
-
பீகார் தேர்தல் - பா.ஜ.க ஆசையில் மண்ணைப் போட்டது 'இந்தியா' கூட்டணி : முரசொலி!
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!