Cinema
தீபாவளிக்கு முன்பே ’பிகில்’ ரிலீஸ் ? - அக்டோபரில் தொடங்குகிறது Vijay 64 - மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள் !
விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியிருக்கும் படம் ’பிகில்’. இதில் நயன்தாரா, இந்துஜா, விவேக், கதிர் என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மெர்சல் படத்தை அடுத்து பிகில் படத்துக்கும் இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் பிகில் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்திருக்கும் நிலையில், பிகில் என்று ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரத்தை தன்னுடன் நடித்தவர்களுக்கு பரிசாக விஜய் அளித்து நெகிழச்செய்துள்ளார்.
இதற்கிடையில், ’சிங்கப்பெண்ணே...’ பாடல் வெளிவந்து கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. படத்தின் போஸ்டர்களும் விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதால், படம் வெளியாவதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், பிகில் படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என்று படக்குழு, ஷூட்டிங் தொடங்கும் போதே அறிவித்திருந்தது. தற்போது அக்டோபர் 24ம் தேதியே பிகில் படம் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஏனெனில், அக்.,24ம் தேதி வியாழக்கிழமையாக இருப்பதால் அடுத்தடுத்து விடுமுறையை கருத்தில் கொண்டு இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மேலும், ‘பிகில்’ திரைப்படத்திற்குப் பிறகு, மாநகரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் த்ரில்லர் படத்தில் நடக்க இருக்கிறார் விஜய். இதற்கான படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!