Cinema
''16 வருச கோமாவிலிருந்து மீண்டெழுந்த ஜெயம் ரவி'' - ஜெயம் ரவியின் 'கோமாளி' பட டிரெய்லர் !
அடங்கமறு படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜெயம் ரவியின் 24வது படமாகும். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்தப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 16 வருடங்களுக்கு பிறகு கோமாவில் இருந்து மீண்டு எழுந்தவராக நடித்துள்ளார் ஜெயம் ரவி. கோமாவில் இருந்து மீண்டெழுந்து ஜெயம் ரவிக்கு தற்போதுள்ள உலகை அறிமுகப்படுத்துகிறார் யோகிபாபு.
இந்தப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் என்று திரைக்குழு அறிவித்துள்ளது.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!