Cinema
சினி அப்டேட்ஸ் 5 : ரஜினியைத் தொடர்ந்து தனுஷ்..? FIR -க்கு விளக்கம் என்ன..?
1. சூடுபிடிக்க துவங்கியது சூர்யாவின் காப்பான் பட வியாபாரம்
அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு, சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் ‘காப்பான்’. முதன்மை கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ஆர்யா, சமுத்திரகனி, பொம்மன் இரானி, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காப்பான் படத்தில் பிரதமராக மோகன்லால் நடிக்க, அவரின் பாடிகார்ட்டாக சூர்யா நடித்திருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் அனைத்து பாடலையும் வருகிற 21ஆம் தேதி இசை வெளியீட்டு விழாவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படத்தின் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. முதல்கட்டமாக, படத்தின் ஓவர் சீஸ் உரிமையை பார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் மற்ற உரிமைகளுக்கான வியாபாரம் தற்போது நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
2. ரஜினியை தொடர்ந்து தனுஷை இயக்கவிருக்கும் கார்த்திக் சுப்பாராஜ்
ரஜினி நடிப்பில் இந்த வருடம் திரைக்கு வந்த படம் பேட்ட. ரஜினி, விஜய் சேதுபதி, நவசுதீன் சித்திக், சசி குமார், சிம்ரன், த்ரிஷானு பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்தனர். ரஜினியின் படத்தைத் தொடர்ந்து, தனுஷை இயக்க தயாராகிவருகிறார் கார்த்திக் சுப்பராஜ். பேட்ட படத்துக்கு முன்னாடியே தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி இணைய வெண்டியது சில பல காரணத்தால் தள்ளிப் போனது. தற்போது மீண்டும் இப்படத்தின் பேச்சு வார்த்தை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
இப்படத்தில் சில ஹாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க போச்சுவார்த்தை நடந்துவருகிறது. மேலும், தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும், தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
3. விஷ்ணு விஷாலின் புதிய படத்திற்கு ‘எஃப் ஐ ஆர்’என தலைப்பு
விஷ்ணு விஷால் கைவசம் ‘ஜெகஜால கில்லாடி’, ‘இன்று நேற்று நாளை 2’, விக்ராந்துடன் ஒரு படம் உருவாகிவருகிறது. இப்படங்கள் தவிர, ஒரு சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகிவருகிறார். அந்த வரிசையில் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் படம் தான் ‘எஃப் ஐ ஆர்’. இப்படத்தின் முதல்பார்வை தற்பொழுது வெளியாகியுள்ளது.
இத்தலைப்பின் முழு விளக்கம் என்னவென்றால், “ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்” என்பதே. படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சுமா மோகன் நடிக்கிறார். அஸ்வத் இந்தப் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார். ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. சாஹோ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா?
பாகுபலி படங்களுக்குப் பிறகு, நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் சாஹோ. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார்.
இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய ஆக்ஷன் ப்ளாக் திரைப்படமாக இது உருவாகிவருகிறது. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தின் வேலைகளை முடிக்க முடியுமா என்கிற சந்தேகம் தற்பொழுது படக்குழுவுக்கு எழுந்துள்ளது. ஏனெனில் படத்தில் ஏகப்பட்ட விஷூவல் எஃபெக்ட்ஸ் வேலைகள் இருக்கிறது. ஆக, சாஹோ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
5. ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை டோராடூன் செல்லும் விஷால்- சுந்தர். சி
சுந்தர் சி - விஷால் கூட்டணியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ஆம்பள. இந்தக் கூட்டணி தற்பொழுது மறுபடியும் இணைந்து பணியாற்றிவருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துவருகிறார். இப்படம் வழக்கமான சுந்தர்.சி. படம் போல இல்லாமல், ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் துருக்கி, அஸர்பைஜான் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது.
அடுத்த கட்ட ஷூட்டிங்கை சென்னை பின்னி மில்லில் நடத்தி முடித்தது படக்குழு. இந்நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஜெய்ப்பூர் மற்றும் டோராடூன் சென்றிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை அங்கு ஷூட்டிங் நடைபெறவிருக்கிறது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!