Cinema
வெளியானது ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் டிரெய்லர்!
2017-ல் ஜான் வாட்ஸ் இயக்கத்தில் உருவான ஹாலிவுட் படம் ’ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங்’. ஸ்பைடர் மேன் சீரிஸின் ரீபூட் வெர்ஷனாக உருவான இந்த ஸ்பைடர்மேன் கதாபாத்திரம்தான் அவெஞ்சர்ஸ் படத்திலும் இடம் பெற்றிருந்தது. சமீபத்தில் வெளியாகி ஹிட்டான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திலும் கூட இடம்பிடித்திருந்த இந்த ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி அடுத்ததாக ஹாலிவுடில் உருவாகி வரும் படம் `ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரெம் ஹோம்’.
ஹோம்கம்மிங் படத்தை இயக்கியிருந்த ஜான் வாட்ஸ்தான் இந்த பாகத்தையும் இயக்கியிருக்கிறார். மார்வெல் யுனிவெர்ஸின் Three phase கதைகள் முடிந்திருக்கிறது. இந்த பாக கதை Fourth phaseக்கான ஆரம்பமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் ஜூலை 5ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட இந்தப் படம் தற்போது ஜூலை 2ம் தேதியே வெளியாக இருக்கிறது என அறிவித்திருக்கிறது படக்குழு.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !