Cinema
மாஸ் ஸ்கிரிப்டுடன் பசங்க பட இயக்குநர்... அடுத்த 2 ஆண்டுகளுக்கு சூர்யாவின் ராஜ்ஜியம்...
சூர்யாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘என்.ஜி.கே.’ படம் இந்த (மே) மாத இறுதியிலும், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காப்பான்’ படம் ஆகஸ்ட் மாத இறுதியிலும் வெளிவர இருக்கிறது.
இந்த இரண்டு படங்களிலும் நடிப்பு, டப்பிங் என அனைத்து பணிகளையும் சூர்யா முடித்துவிட்ட நிலையில், இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒப்பந்தமாகியிருக்க சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
மேலும் சிறுத்தை சிவா இயக்கத்திலும் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். கூடிய விரைவில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு மற்றும் இதர விவரங்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பசங்க, மெரினா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதில், “நடிகர் சூர்யாவுடன் எப்போது மீண்டும் இணைந்து படம் எடுக்க போறீங்கனு” ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பாண்டிராஜ், “சூர்யாவுக்காக பக்கா மாஸ் கமர்சியல் & வில்லேஜ் ஸ்டைல் கதை ரெடியாகிட்டு வருது” என தெரிவித்துள்ளார்.
என்.ஜி.கே., காப்பான் ரிலீஸ், சூரரைப் போற்று, சிறுத்தை சிவா கூட்டணி என தொடர்ந்து அறிவிப்பு வெளிவந்த நிலையில், தற்போது, சூர்யாவுக்கான பாண்டிராஜின் கதையும் தயாராகியிருப்பது சூர்யாவின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே அமைந்திருக்கிறது.
முன்னதாக, இயக்குநர் பாண்டிராஜுடன் இணைந்து பசங்க 2 (ஹைக்கூ) படத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
 - 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
 - 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!