Cinema
செல்வராகவனின் அடுத்த படத்தில் ஹீரோவாகும் ஜெயம் ரவி
செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி உள்ளிட்ட படங்களின் வேலைகள் முடிந்தும் தயாரிப்பு பிரச்சனையால் ரிலீசாகாமல் உள்ளது.
இந்த நிலையில், செல்வராகவன் சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கி முடித்துவிட்டார். படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், ஜெகபதி பாபு, மன்சூர் அலிகான், பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி குரு சோமசுந்தரம், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்த நிலையில், செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜெயம் ரவி தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!