Cinema
சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் பட டைட்டில்!
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் மே 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தவிர, ‘இன்று நேற்று நாளை’ரவிக்குமார் இயக்கத்திலும், ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும், பாண்டியராஜ் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதற்கிடையே, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படத்தின் கதை விவாதப் பணிகளுக்காகத் தான் மும்பை சென்றிருக்கிறார் விக்னேஷ்சிவன்.
ஜூலை மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. காதலை மையமாகக் கொண்ட கதைக்களமாக இருக்கும் எனவும், படத்திற்கு ‘எல்ஐசி’ என பெயர் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ‘எல் ஐ சி’ என்றால் லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி என்று அர்த்தமாம்.
விக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் தலைப்பை விரைவில் அறிவிக்கவும் இருக்கிறார்கள் படக்குழுவினர்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!