Cinema
சூர்யாவின் அடுத்த படத்திற்கு வசனம் எழுதும் விஜய் !
அறிமுக இயக்குனர் விஜய் குமார் இயக்கி, நடித்து 2016 ல் வெளியான படம் ‘உறியடி’.அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூர்யா ‘உறியடி’ இரண்டாம் பாகத்தை தன்னுடைய 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சூர்யா பேசும்போது ‘படக்குழுவினர் இந்த படம் உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்காது. உங்களை பாதிக்கும் ஒரு படமாக இருக்கும் என்று தெளிவாக சொன்னார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இயக்குனர் விஜயகுமாரை முதன்முறை சந்தித்தபோதே அவரது உண்மைத்தன்மை என்னை ஆச்சர்யப்படுத்தியது.
எனக்காக என் அப்பா ஒரு இயக்குநரைக்கூட சந்தித்தது கிடையாது. கதைகூட கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும், ‘நடிகரின் மகன்’ என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது. ஆனால், எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் ‘உறியடி’ என்ற படத்தை எடுத்து விஜய் குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன்.
அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ‘உறியடி’ படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான விஜய்குமார் தான் வசனம் எழுதுகிறார்.சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்தில் நடித்து வருகிறார்.
Also Read
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
-
“எதிர்க்கட்சித் தலைவர் கைது.. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்த பாசிச தவெக அரசு” : துரைமுருகன் கண்டனம்!
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!