தமிழ்நாடு

மே 7.. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று ஒலித்த குரலால் மின்னும் தமிழ்நாடு - வீடியோ வைரல்!

சமூக வலைதளப் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 3 ஆண்டு சாதனை குறித்த உரையாடல் வடிவில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மே 7.. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று ஒலித்த குரலால் மின்னும் தமிழ்நாடு - வீடியோ வைரல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சமூக வலைதளப் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 3 ஆண்டு சாதனை குறித்த உரையாடல் வடிவில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் மே 7, 2021 முத்துவேல் கருணாநிதி ஸ்டாவின் எனும் நான்' - என்று ஒலித்த குரவினால் தமிழ்நாடே இன்று புதிய வண்ணமாய் மினுமினுக்கிறது என்றும் 4 ஆம் ஆண்டு கொடக்கத்தையொட்டி நெகிழ்ச்சியான பதிவுகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

சமூக வலைதளப் பதிவில் வைரலாகி வரும் வீடியோ வருமாறு :-

விமான நிலையத்திற்கு வெளியே 46 வயது மதிக்கத்தக்க ஒருவர், தன் பையை மாட்டிக் கொண்டு ஆட்டோவை அழைக்கிறார், ஆட்டோ வருகிறது. அந்த 48 வயது ஆள் ஆட்டோவில் உள்ளே ஏறி அமர்ந்து ஆட்டோவை பார்க்கிறார். அந்த ஆட்டோவில் அய்யா தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மாண்புமிகு முதல்வர் ஸ்டாவின் அவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருப்பதைக் காண்கிறார்.

*“என்னப்பா தம்பி, சினிமா பிரபலங் களுக்கு இந்த மாதிரி போட்டோ ஸ்டிக்கர் களை ஒட்டி பார்த்து இருக்கிறேன், நீ என்னப்பா, அரசியல் கட்சிக்காரர்களின் போட்டோக்களை ஒட்டி இருக்கிறாய்?" என்று கேட்க,

அந்த ஆட்டோ ஓட்டுநர் பெருமிதத்துடன், “சார், யார் ரியல் ஹீரோவோ அவர்களுடைய போட்டோவை ஒட்டுவதில் ஒன்றும் தப்பு இல்லையே சார்" என்று சொல்ல, அதற்கு பெரியவர், "கரெக்ட்தான், எல்லோருமே நல்லது பண்ணவா போறாங்க? எப்படிப் பார்த்தாலும் முக்கியமாக எலக்சன் நேரக்தில் ஓட்டை மட்டும் கேட்டுட்டுப் போறங்க, மாற்றத்தை கொண்டு வரேன்னு சொல்லிட்டு போறாங்க; ஆனா எந்த ஒரு மாற்றமும் வந்த மாதிரி தெரியலையே” என்று பெரியவர் சொல்ல,

இதனைக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர், "சார், என்ன சார் சொல்றீங்க?

உங்களுக்கு ஒரு சூப்பர் சி.எம். ஸ்டாலின் அவர்களுடைய கதையை சொல்கிறேன் கேளுங்கள்” என்று சொல்லி . சொல்லத் தொடங்கினார்.

மே 7.. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று ஒலித்த குரலால் மின்னும் தமிழ்நாடு - வீடியோ வைரல்!

சார், ஆட்சிக்கு வந்த முதல் நாளே நம்ம சூப்பர் சி.எம். போட்ட முதல் கையெழுத்து என்ன தெரியுமா? தமிழ்நாடு முழுவதும் எல்லா மகளிருக்கும் கட்டணயில்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் என்பதுதான்சார், ஆங்கிருந்து ஆரம்பித்தது இந்த திராவிட மாடல் பயணம்!

“நம்ம சூப்பர் சி.எம்.வோட ககை தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு குடும்பதி ற்குள்ளும் பரவி இருக் கிறது சார்.

வீட்டுக்குள் ஓரமாய் கிடந்த பழைய பட்டன் மாடல் கைபேசி ஏதோ குறுஞ்செய்தி வந்ததற்கான அடையாளமாக சினுங்குகிறது, சோர்வுடன் சென்று அந்தப் போனை எடுத்துப் பார்க்கிறார், அந்தப் பெண்.

தமிழ்நாடு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அவள் வங்கிக் கணக்கில் ரூபாய் 1868 வந்திருப்பதற்கான, குறுஞ் செய்தியைப் பார்த்து நெடிய நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாள்!

தமிழ்நாட்டின் தெற்கில் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் ஒரு பெண் அருகே, அவள் 'அப்பா வந்து, “அம்மா மாச கடைசி பாப்பா...”

"அது எல்லாம் வேண்டாம்பா, அதான் முதலமைச்சர் அய்யா புண்ணியத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாசம் மாசம் ஆயிரம் ரூபாய் கிடைக்குதேப்பா, இந்த மாதத்திற்கான பணம்இன்றைக்கு கிடைச்சுருக்கு அப்பா, நம்ம மாதிரி ஏழை எளிய மக்களுடைய நம்பிக்கையின் சாட்சியா இருக்கிறது நம்ம ஸ்டாவின் அய்யா அவர்களுடைய விடியல் ஆட்சி!" என்கிறார் கல்லூரி மாணவி!

மே 7.. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று ஒலித்த குரலால் மின்னும் தமிழ்நாடு - வீடியோ வைரல்!

டெல்டா மாவட்டத்தில் ஒரு மாற்றுத்திறனாளி பெண், தன் எட்டு வயது பையன் புத்தகப் பையுடன் தயாராகிக் கொண்டு இருப்பதைப் பார்த்து "கண்ணு... டேய்... காலையில் எதுவும் சாப்பிடாம பள்ளிக் கூடத்துக்கு போகக் கூடாதப்பா... இந்தா, கொஞ்சம் பொறு..."

"வேண்டாம்மா, எங்க பள்ளிக் கூடத்திற்கு நான் போன உடனே காலையில் சுடச்சுட ஏதாவது டிபன் தந்து விடுவாங்களே, அங்கு சாப்பிடுகிறேன். பெண்ணின்முகத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கூடிக்கொண்டே சுவற்றில்இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின்புகைப்படத்தைப் பார்த்து நெகிழ்கிறார்.

வீட்டுக்கு வெளியே மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் குழுவினர் வேனில் வந்து வீட்டு வாசலில் நின்றனர்.

நோயுற்று இருந்த அந்த வயதானவரின் உடல் நலத்தை பரிசோதித்து மருந்துகளை வழங்கினர்.

இப்படியாக ஒரு பெண் செல்போனில் வெளியூர்களில் தங்குவதற்கு விடுகி பார்த்துக் கொண்டிருக்க, அவளின் தோழி, குறுஞ் செய்தியாக "கோழி'' ஹாஸ்டல் திட்டம் பற்றி அனுப்ப, அதைப் பார்த்து புன்னகைக்கிறார்.

மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளி ஒருவர் வீல் சேரில் அமர்ந்து படி கடலைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர் கண்ணை மூடி திறக்கும்போது கடற்கரைவரை சென்று வருவதற்கான மேடை அமைந்திருப்பதை பார்த்து பரவசமடைகின்றனார்.

மே 7.. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று ஒலித்த குரலால் மின்னும் தமிழ்நாடு - வீடியோ வைரல்!

இதற்கெல்லாம் மேல் ஒரு மாணவனுக்கு 'நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக அவனுடைய ஐ.ஏ.எஸ். கனவு நிஜமானது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு வழங்கும் உதவிகளால் பெண்கள் நிம்மதியாக முன்னேற்றத்திற்கான பாதையில் பயணிக்கத் தொடங்குகிறார்கள்.

குழந்தைகள் ஆரோக்கியத்துடன் கூடிய கல்வி பெறுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் மாற்றத்தை உணருகிறார்கள், மூன்றாம் பாலினத்தவர்கள். சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள்.

மாணவர்கள் "நான் முதல்வன்" கிட்டக்கின் மூலம் அவர்களின் யு.பி.எஸ்.சி. கனவை நிஜமாக்குகிறார்கள்.

இதுபோல் இன்னும் எத்தனை எத்தனை நலத்திட்டங்கள்? என்ன சார் ; இதுவெல்லாம் வெறும் டிரைலர்தான், நம்ம சூப்பர் சி.எம். ஆட்சியைப் பற்றி சொல்ல இந்த ஒரு பயணம் பத்தாது சார் என்கிறார் ஆட்டோக்காரர்!

"கரெக்ட்தான் தம்பி"

ஏழைகளுக்காகவே இத்தனை திட்டங்கள் நிறைவேற்றுகின்ற அந்த ஸ்டாலின் அய்யா மகராசனா இருக்கணும் என்று மக்களின் கூட்டம் நெகிழ்ச்சியுடன் ஆரவாரமளிக்கிறது.

வீடுகள்தோறும் தேடிச் சென்று உதவுவது திராவிட மாடல் அரசு!

அது உங்களின் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

இவ்­வாறு அந்த வீடி­யோ­ பதிவு வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories