இந்தியா

”ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கும்” : ராகுல் காந்தி அதிரடி!

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கும் என ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார்.

”ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கும்” : ராகுல் காந்தி அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 ஆவது மக்களவை தொகுதி 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த மக்களை தேர்தலில் 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்தும் ஒரே கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் கண்டுள்ளனர்.

மூன்று கட்ட தேர்தல் முடிந்ததை அடித்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்கள், பா.ஜ.க கூட்டணி தலைவர்கள் அனல் பரக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி எம்.பி, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கும் என ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவில், ”பிரதமர் மோடியின் பொய் பிரசாரங்களில் கவனம் சிதறாமல் உறுதியாக இருங்கள். இளைஞர்களை திசை திருப்பும் நோக்கத்தில் பிரதமர் மோடி முன்வைக்கும் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். ஜூன் 4ம் தேதி இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். பிரதமர் பதவி தன் கையை விட்டுப்போகிறது என்ற பயத்தில் மோடி இருக்கிறார்.

தோல்வி பயம் காரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகத்தை பிரதமர் மோடி அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். இந்திய பிரதமர் என்ற நிலையில், இருந்து தரம் தாழ்ந்து பேசுகிறார் மோடி. இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணிகள் தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories