இந்தியா

ரூ.42 கோடி விதிமீறல் செய்த பா.ஜ.கவை கண்டு கொள்ளாதது ஏன்? : வருமான வரித்துறைக்கு காங்கிரஸ் கேள்வி!

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை வருமானவரித்துறை குறிவைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.42 கோடி விதிமீறல் செய்த பா.ஜ.கவை கண்டு கொள்ளாதது ஏன்? :  வருமான வரித்துறைக்கு காங்கிரஸ் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த அடுத்த நாளே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமானவரித்துறை முடக்கியது.

2018-19ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாகக் காங்கிரஸ் கட்சி சமர்ப்பித்தால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் கடும் எதிர்ப்புகளுக்கு அடுத்து வங்கி கணக்கு விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வருமான வரி கணக்கை முறையாகத் தாக்கல் செய்யாததால், வட்டியுடன் அபராதமாக ரூ.1823 கோடி செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை மூலம் மிரட்டி வந்த பா.ஜ.க அரசு தற்போது தேர்தல் தோல்வி பயத்தால் வருமான வரித்துறையைப் பயன்படுத்தி மிரட்டுவது தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில் பா.ஜ.கவை மட்டும் வருமான வரித்துறை கண்டு கொள்ளாதது ஏன்? என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,"2017-18- ஆண்டில் 14 லட்ச ரூபாய் அளவுக்கு விதிமீறல் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு 135 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதே ஆண்டில் பாஜக 42 கோடி ரூபாய் வரை விதிமீறல் செய்திருக்கிறது. ஆனால் அபராதம் விதிக்கப்படவில்லை. பாஜகவின் விதிமீறல் மட்டும் வருமான வரித்துறைக்குத் தெரிவதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories