தி.மு.க

“நிதி நெருக்கடியை சமாளிக்க மாநிலங்களின் வரி பங்கினை அதிகரிக்க வேண்டும்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

“மாநிலங்களின் நிதி நெருக்கடியைத் தவிர்க்க, தற்போதைய வரி பங்கான 41%-லிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“நிதி நெருக்கடியை சமாளிக்க மாநிலங்களின் வரி பங்கினை அதிகரிக்க வேண்டும்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“மாநிலங்களின் நிதி நெருக்கடியைத் தவிர்க்க, தற்போதைய வரி பங்கான 41%-லிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நிதிநிலை ஒருங்கிணைப்பு திட்டமிடலுக்காக 15- வது நிதிக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று காணொளிக் காட்சி மூலமாக நடைபெறவுள்ளது.

நிதிக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின்படி, மாநிலங்களால் எந்த அளவிற்குக் கடன் மற்றும் பற்றாக்குறை அளவுகளை சமாளிக்க முடியும் என்பது குறித்தும் பங்கு, செயல்திறன் உள்ளிட்டவை குறித்து பரிந்துரைகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், “15-வது நிதிக்குழுவின் இன்றைய கூட்டத்தில் வரிகளை முறையாக பகிர்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தி விவரம் பின்வருமாறு :

“ஊரடங்கு காரணமாக மாநிலங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், 15-வது நிதிக்குழுவின் இன்றைய கூட்டத்தில் வரிகளை முறையாக பகிர்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

நிதி நெருக்கடியைத் தவிர்க்க, மாநிலங்களின் தற்போதைய வரி பங்கான 41%-லிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories